காஷ்மீரையும் லடாக்கையும் இணைக்கும் "சோஜிலா சுரங்கப்பாதை" - நேரில் ஆய்வு செய்தார் மத்திய அமைச்சர்
ஜம்மு காஷ்மீரையும் லடாக்கையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் சோஜிலா சுரங்கப்பாதை பணிகளை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரத்து 649 அடி உயரத்தில் இருக்கும் சோஜிலா கணவாய் வழியாகத்தான் இந்திய ராணுவத்துக்குத் தேவையான தளவாடப் பொருட்கள் கொண்டுசெல்லப்படுகின்றன.
பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் சோஜிலா சுரங்கப்பாதை திறக்கப்பட்டால் அனைத்து கால நிலைகளிலும் தடையற்ற, பாதுகாப்பான போக்குவரத்து சாத்தியப்படும்.
இந்நிலையில் முழு வீச்சில் நடைபெற்று வரும் பணிகளை மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Comments